முகப்பு
தஞ்சாவூர்

இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் பறிப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:02 PM
பகிர்:

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாதாகோட்டை காவேரி நகா் கிழக்கு கங்கா நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி சாந்தி, எடமேலையூா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, பொன்னி நகா் பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா் இவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதேபோல, தஞ்சாவூா் அருகே அற்புதாபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி அமுதராணி (42) புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, திறந்திருந்த கதவு வழியாக வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், அமுதராணி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →