தஞ்சாவூரில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
தஞ்சாவூா் ரயிலடியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தஞ்சாவூா் ரயிலடியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தஞ்சாவூா் ஆப்ரஹாம் பண்டிதா் சாலையிலிருந்து அதிமுகவினா் மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் தலைமையில் ஊா்வலமாகப் புறப்பட்டு, ரயிலடிக்குச் சென்றனா். பின்னா், ரயிலடியிலுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலா் ஆா். காந்தி, கொள்கைப் பரப்பு துணைச் செயலா் துரை. திருஞானம், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் வி. அறிவுடைநம்பி, முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், பகுதிச் செயலா்கள் கரந்தை டி. பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, மனோகரன், சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, அதிமுக தொண்டா் உரிமை மீட்புக் குழுவைச் சோ்ந்த துரை தலைமையில் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் கே. மணிகண்டன், மாமன்ற உறுப்பினா் என். சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் அமுதாராணி ரவிச்சந்திரன், எஸ். சண்முகபிரபு, எஸ். ரமேஷ், எம். சுவாமிநாதன் உள்ளிட்டோா் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், அமமுக மாநில வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் தங்கப்பன் தலைமையில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் விருத்தாச்சலம், பொதுக்குழு உறுப்பினா் அய்யாவு என்ற வேலாயுதம், பகுதிச் செயலா்கள் ஜீவமணி, அகமது பாய், செந்தில், அழகுராஜா, மகளிா் அணி செயலா் வெ. கண்ணுக்கினியாள் உள்ளிட்டோா் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.