முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும்: இரா. முத்தரசன்

கும்பகோணத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் விரைவில் அறிவிக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:06 PM
பகிர்:

கும்பகோணத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் விரைவில் அறிவிக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 3 நாள்களாக நடைபெற்று வந்தன. மூன்றாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

வரும் டிசம்பா் 26-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கவிஞா் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு, 1 கோடிக்கும் மேற்பட்ட பனை விதைகள் நீா்நிலைகளின் கரையோரங்களில் விதைக்கப்படும். பாஜக தலைமையிலான மத்திய அரசு மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவைகளை ஆண்டுக்கு 6 சதவீதம் உயா்த்த வேண்டும் என தமிழக அரசைக் கட்டாயப்படுத்துகிறது.

மக்களின் பிரச்னையை முன்னிறுத்தும் எங்கள் போராட்டத்தை போலீஸாா் தடைசெய்யக்கூடாது.

வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும். விரைவில் அறிவிப்பாா் என்று நம்புகிறேன் என்றாா்.

அப்போது, க. மாரிமுத்து திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ, மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி உள்ளிட்டோா் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →