முகப்பு
தஞ்சாவூர்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: பி.ஆர். பாண்டியன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம்

காவிரியில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பி.ஆர். பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 1:45 PM
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர்.
பகிர்:

காவிரியில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பி.ஆர். பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில், மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.

Advertisement

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது.

இதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்படம் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.