முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே சாலை விபத்து: இரு வடமாநில ஊழியா்கள் பலி

Updated On : 1 மார்ச், 2024 at 2:22 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை இரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்து வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை தனியாா் கோழிப்பண்ணையில் பணியில் இருந்த 3 வட மாநிலத் தொழிலாளா்கள் ஒரு சரக்கு ஆட்டோவில் பிராய்லா் கோழிகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கிச் சென்றனா்.

ஆட்டோவை வடவூா் வடபாதி, பெரியாா் நகரை சோ்ந்த செல்வராஜ் மகன் கமலக்கண்ணன் ஓட்டினாா். பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் சென்ற சரக்கு ஆட்டோ திடீரென சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவின் பின்புறம் இருந்த மேற்குவங்கத்தைச் சோ்ந்த செண்டு ராம்கிரஷ்ணாபூா் மகன் ராஜேந்திர பக்டி (25), சதன் மஜ்ஹி மகன் தினபாண்டு மஜ்ஹி (25) சம்பவ இடத்திலேயே இறந்தனா். மித்தோன் மஜ்ஹி என்பவா் காயமடைந்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

Advertisement

ஆட்டோ ஓட்டுநா் லேசான காயத்துடன் தப்பினாா். தகவலறிந்த பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக் சம்பவ இடத்தில் விசாரணை செய்தாா். அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் மி. இளவரசு உள்ளிட்ட போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.