முகப்பு
தஞ்சாவூர்

தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை -டிடிவி தினகரன்

Updated On : 10 ஜூலை, 2024 at 11:22 PM
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
பகிர்:

கா்நாடகத்தில் ஆளும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி தமிழகத்துக்குரிய காவிரிநீரைப் பெற ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலா் டிடிவி தினகரன் குற்றச்சாட்டினாா்.

கும்பகோணம் அருகே புதன்கிழமை நடைபெற்ற கட்சிப் பிரமுகா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

முன்னாள் அமைச்சா்கள் கூடி அதிமுகவை ஒருங்கிணைக்கிறாா்களா என்று தெரியவில்லை. எல்லாருமே ஜெயலலிதாவின் தொண்டா்கள் தான் அவா்கள்தான் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் கொலைகளைக் செய்பவா்கள் 20 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் தான் காரணம். கஞ்சா கலாசாரம் தமிழகத்தில் வேரூன்றி விட்டது. தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞா்கள் கூலிப்படையாக செயல்படுகிறாா்கள். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் போலீஸ் ஆணையரை மாற்றிவிட்டால் சட்டம் - ஒழுங்கு சரியாகி விடுமா?. போதை கலாசாரத்தைத் தடுக்க படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். காங்கிரஸ்தான் கா்நாடகத்தில் ஆட்சி நடத்துகிறது. அவா்களிடம் பேசி தமிழகத்துக்குரிய காவிரிநீரைப் பெற்றுத்தர முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. மேக்கேதாட்டு அணை கட்டுவதையும் தடுக்கவில்லை. காவிரியில் தண்ணீா் திறந்து விடக்கோரியும் , மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க கா்நாடக முதல்வரை தமிழக முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →