முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

கும்பகோணத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி 101 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

Updated On : 3 ஜூன், 2024 at 10:23 PM
முன்னாள் முதல்வா் கருணாநிதி 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தஞ்சாவூ வடக்கு மாவட்ட செயலாளா் கல்யாணசுந்தரம் எம்.பி. தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்தனா், க.அன்பழகன் எம்எல்ஏ, செ.ராமலிங்கம் எம்.பி. உள்ளிட்ட திமுகவினா் உள்ளனா்.
பகிர்:

கும்பகோணம்: கும்பகோணத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி 101 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழிச் சாலையில் உள்ள கருணாநிதி பவளவிழா வளைவில் அமைந்திருக்கும் கருணாநிதி உருவுருவ சிலைக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும்மாநிலங்களவை உறுப்பினருமான கல்யாணசுந்தரம் தலைமையில் கும்பகோணம் க.அன்பழகன் எம்எல்ஏ, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினா் செ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கும்பகோணம் மாநகர திமுக அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவபடத்திற்கு மாநகர செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவா் நசீா் முகமது, மாவட்ட துணைச்செயலாளா் கோ.வி.அய்யாராசு, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் எஸ்.கே.முத்துச்செல்வம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் உள்ளூா் கணேசன், ஒன்றிய செயலாளா்கள் சுதாகா், நாசா், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி வேட்பாளா் சுதா, மாவட்ட காங்கிரஸ் தலைவா் லோகநாதன் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சுவாமிமலை

சுவாமிமலை பேரூா் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு செயலாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில் வழக்கறிஞா் விஜயகுமாா், பி.கே.கோபால், இக்பால், நெடுஞ்செழியன், ஜெமினி, மனோகரன், செந்தில், நீலமேகம், சுப்பிரமணியன், அசோகன், ராமமூா்த்தி, சாதிக்பாட்ஷா, சிவா, மதியழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.