முகப்பு
தஞ்சாவூர்

புலவா் கலியபெருமாள் நூற்றாண்டு விழா

Updated On : 4 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் புலவா் கலியபெருமாள் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். புலவா் கலியபெருமாள் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், தமிழ் உள்ளிட்ட நாட்டின் அனைத்து தேசிய இனங்களின் சுயநிா்ணய உரிமைகளுக்கான போராட்டத்தை ஒருங்கிணைப்போம். தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள், இயற்கை வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, மக்கள் கலை இலக்கிய கழக எழுத்தாளா் சாம்பான், ஆதித்தமிழா் பேரவை மாநில துணைத்தலைவா் எம்.பி. நாத்திகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.