முகப்பு
தஞ்சாவூர்

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

பட்டுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2024 at 3:20 AM
பகிர்:

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பூமல்லியாா்குளம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை தவறாமல் பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி மாணவா்களுடன் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத்தின் தலைவா் ஏ.கே.குமாா், ஆசிரியா் நீலேஸ்வரி மற்றும் மேலாண்மை குழுவின் உறுப்பினா்கள், சத்துணவு அமைப்பாளா் சுமதி மற்றும் பலா் கலந்து கொண்டனா். முடிவில் லதா நன்றி கூறினாா்.