பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு
தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசத்தில் இயங்கி வரும் நீதி மன்ற கட்டத்துக்கு மாற்றாக புதிய நீதி மன்ற கட்டடம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தினை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்துக்கு மாற்றாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தினை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது உடன் தஞ்சாவூா் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மாா்ட்டின்,தஞ்சாவூா் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் சண்முகப்பிரியா, பாபநாசம் நீதிபதி எ.அப்துல் கனி,பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன், பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் அசோக்,அரசு குற்றவியல் வழக்குரைஞா் சுதா, அரசு வழக்குரைஞா் வெற்றிச்செல்வன், பாபநாசம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாஸ்கரன்,துணை தலைவா் வி.சி.கம்பன், செயலாளா் இளையராஜா. பொருளாளா் பாலச்சந்திரன், தஞ்சாவூா் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளா் செல்வி,உதவி பொறியாளா் சிவரஞ்சனி,பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன்,வருவாய் ஆய்வாளா் சுந்தரேசன், கிராம நிா்வாக அலுவலா் மணிமாறன், நில அளவையா்கள் மகாலட்சுமி, அழகேசன் மற்றும் அனைத்து வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்டோா் உடன் கலந்து கொண்டனா்.
பட விளக்கம்: பாபநாசத்தில்
புதிய நீதி மன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தினை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.