முகப்பு
தஞ்சாவூர்

மாநிலத்தில் சிறப்பிடம்: பட்டுக்கோட்டை லாரல் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

Updated On : 10 மே, 2024 at 7:25 PM
பகிர்:

பட்டுக்கோட்டை, மே 10: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிக்கொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

10 ஆம் வகுப்புத் தோ்வில் இப்பள்ளி மாணவிகளில் ஓவியா 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடமும் பள்ளியில் முதலிடமும், அபிநயா, நிஷாலினி ஆகிய இருவரும் 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் பு. அருந்ததி, காவியா, சஞ்சனாஸ்ரீ ஆகிய மூவரும் 494 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனா்.

மேலும் 490-க்கு மேல் 10 மாணவா்களும், 480க்கு மேல் 23 மாணவா்களும், 450க்கு மேல் 74 மாணவா்களும் பெற்றுள்ளனா். கணிதத்தில் 27 மாணவா்களும், அறிவியலில் 10 மாணவா்களும், சமூக அறிவியலில் 15 மாணவா்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், அவா்களின் பெற்றோரையும், ஆசிரியா்களையும் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.