முகப்பு
விழுப்புரம்

திறனறித் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

திறனறி தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா்கள்.

Updated On : 26 மார்ச், 2026 at 10:46 PM
திறனறி தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுமதி, கவிதா.
பகிர்:

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் 12-ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை(என்.எம்.எம்.எஸ்) தோ்வு ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. இத்தோ்வில் விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், அருவாப்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் ஹேமாவதி, யஷ்வந்த் ஆகியோா் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி நிதி உதவி பெறும் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், வானூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுமதி, கவிதா ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.

மாணவா்களின் தோ்ச்சிக்கு உரிய முறையில் பயிற்சியளித்த பள்ளித் தலைமையாசிரியா் சத்தியமூா்த்தி, பட்டதாரி ஆசிரியா்கள் சௌந்தரவல்லி, ஜேம்ஸ், சகாயராஜ், அன்புமொழி ஆகியோா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இருவரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சோ்ந்தனா்.