முகப்பு
தஞ்சாவூர்

10-ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பிடித்த தஞ்சை!

10-ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பிடித்த தஞ்சை!

Updated On : 10 மே, 2024 at 6:54 AM
பகிர்:

தஞ்சாவூர்: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 15 ஆவது இடம் பிடித்துள்ளது.

மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வில் 14 ஆயிரத்து 402 மாணவர்களும், 14 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 915 பேர் எழுதினர். இதில் 13 ஆயிரத்து 32 மாணவர்களும், 13 ஆயிரத்து 974 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 6 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் 90.49 சதவீதம் பேரும், மாணவிகள் 96.29 சதவீதம் பேரும் என மொத்தம் 93.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு விட நிகழாண்டு 2.01 சதவீதம் கூடுதல்.

வழக்கம்போல் நிகழாண்டும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் 17 ஆம் இடத்தை பிடித்திருந்த நிலையில், நிகழாண்டு 15 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →