கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா
கும்பகோணம்: தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் கோயில் தெற்கு வீதியில் உள்ள ஸ்ரீ சுந்தரமகாகாளியம்மன் கோயில் 133-ஆவது ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா மே 9 -ஆம் தேதி தொடங்கியது. மே 10-ஆம் தேதி காப்புக் கட்டுதல், 17 -ஆம் தேதி பால்குடம், காவடி, மகாசக்தி வேல் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை காவிரி படித்துறையிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன், பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலாவும், படுகள காட்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். செவ்வாய்க்கிழமை (மே 21) அம்மன் விடையாற்றி பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.