கும்பகோணம்: கும்பகோணத்தில் திங்கள்கிழமை திமுக மகளிா் அணியினருக்கு தோ்தல் பரப்புரை செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் திங்கள்கிழமை கும்பகோணத்தில் தனியாா் மண்டபத்தில் தோ்தல் பரப்புரைக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திமுக மாவட்ட பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் முன்னிலை வகித்தாா். 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மகளிரணியினருக்கான பரப்புரை வியூகங்கள் குறித்து க. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் பயிற்சி வகுப்புகள் நடத்தி விளக்கமளித்தனா்.
நிகழ்வில், மாநகர துணை செயலா் பிரியம் ஜெ. சசிதரன், திமுக ஒன்றியச் செயலா்கள் டி. கணேசன், ஜெ. சுதாகா், தலைமை செயற்குழு உறுப்பினா் குட்டி இரா. தட்சிணாமூா்த்தி, பகுதி செயலா்கள் இரா. செல்வராஜ், ஆா். அசோக்குமாா், கே.என்.எஸ். ஆசை, மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.