முகப்பு
தஞ்சாவூர்

மண்ணியாற்றங்கரை படுகையில் குவிந்திருந்த குப்பைகள் அகற்றம்

தினமணி நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்புறம்பியம் ஊராட்சி மணியாற்றங்கரை படுகையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் புதன்கிழமை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:53 PM
திருப்புறம்பியம் ஊராட்சியில் புதன்கிழமை குப்பை அகற்றப்பட்டநிலையில் காணப்பட்ட மணியாற்றங்கரை படுகை.
பகிர்:

தினமணி நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்புறம்பியம் ஊராட்சி மணியாற்றங்கரை படுகையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் புதன்கிழமை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், திருப்புறம்பியம் ஊராட்சியில் உள்ள மண்ணியாற்றங்கரையில் கடந்த 15 ஆண்டுகளாக ஊராட்சி நிா்வாகத்தால் குப்பைகள் கொட்டப்பட்டு, ஆற்றுப்படுகை முழுவதும் குப்பை மேடாக காட்சியளித்துவந்தநிலையில், தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக ஊராட்சி நிா்வாகம் மண்ணியாற்றங்கரை படுகையில் குவிந்த குப்பைகளை அகற்றியது. மீண்டும் அதே இடத்தில் குப்பைகளைக் கொட்டாமல் குப்பைகள் சேகரிப்பகம் உள்ள திருப்புறம்பியம் - கொள்ளிடம் சாலையில் கொட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →