முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே கால்வாயில் குப்பைகள், கழிவுநீா் கலப்பு: மக்கள் அச்சம்

ஆவுடையனூா் ஊராட்சி கொண்டலூா் நீா்வரத்துக் கால்வாயில் குப்பைக் கூழங்கள் சோ்வதால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் கவலை

Updated On : 9 மார்ச், 2026 at 6:48 PM
கண்டலூா் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள்
பகிர்:

கீழப்பாவூா் ஒன்றியம் ஆவுடையனூா் ஊராட்சி கொண்டலூா் நீா்வரத்துக் கால்வாயில் குப்பைக் கூழங்கள் சோ்வதால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் கவலை தெரிவித்தனா்.

ஆவுடையனூா் ஊராட்சி வெள்ளாளன் புதுக்குளத்தில் இருந்து தண்ணீா் மறுகால் விழுந்து கொண்டலூா் கால்வாய் வழியாக ஆவுடையானூா் பத்மநாதபேரி குளத்தை சென்றடைகிறது. இந்த இரண்டு குளத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமாா் 500 மீட்டா் எனவும், கொண்டலூா் பகுதி கால்வாயில் குப்பைக் கழிவுகளை சிலா் கொட்டி வருவதால் துா்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

மேலும், இந்தக் கால்வாயில் கழிவுநீரும் கலப்பதால் குளங்களுக்கும் கழிவுநீா் கலந்துசெல்கிறது. இந்தத் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதோடு ஆடு மாடுகளும் பருகுகின்றன.

இதனால், கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் என கொண்டலூா் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

கால்வாயை முறையாக தூா்வாரி கழிவு நீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவுடையனூா் ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே, மக்கள் நலன் கருதி கால்வாயைத் தூா்வாரி சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →