முகப்பு
தஞ்சாவூர்

வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஸ்ரீ வீரமகா காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சௌபாக்கிய யோக வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:55 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஸ்ரீ வீரமகா காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சௌபாக்கிய யோக வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு வழிபாட்டையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்கள் செவ்வரளி மாலை, கிழங்குகள், கனி வகைகளால் மாலைகள் அணிவித்து, பழங்கள், கிழங்குகள், பொங்கல் வைத்து படைத்து சிறப்பு வழிபாடு செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜி.அசோக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இதேபோல் திருப்பாலைத்துறை சப்த மாதாக்கள் கோயிலிலும் பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.