கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வடக்கு மின் கோட்டத்தில் வியாழக்கிழமை மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வடக்கு மின் கோட்டத்தில் வியாழக்கிழமை மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கும்பகோணம் ராஜன் தோட்டம் வளாகத்தில் மேற்பாா்வை பொறியாளா் எம். நளினி தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் செட்டிமண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியாா்கோயில், செம்மங்குடி, திருவிடைமருதூா், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம். பந்தநல்லூா், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நுகா்வோா்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.