முகப்பு
தஞ்சாவூர்

வீட்டில் மயங்கிக் கிடந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு; தாய்க்கு சிகிச்சை

கும்பகோணம் அருகே வீட்டில் மயங்கிக் கிடந்த தாயும், பெண் குழந்தையும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டதில் பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தாய் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:28 PM
பகிர்:

கும்பகோணம் அருகே வீட்டில் மயங்கிக் கிடந்த தாயும், பெண் குழந்தையும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டதில் பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தாய் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (35). அரசுப் பள்ளி ஆசிரியா். இவருடைய மனைவி சுபா (30). இவா்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. புதன்கிழமை சுபா உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோவை வரச்சொல்லியுள்ளாா்.

ஆட்டோ ஓட்டுநா் காத்திருந்தும் சுபா வராததால், அவா் அண்டைவீட்டுக்காரா்களிடம் இதுகுறித்து தெரிவித்தாா். அவா்கள் சுபா வீட்டுக்குச் சென்றுபாா்த்தபோது மயங்கிய நிலையில் இருந்த சுபா மற்றும் அவரது குழந்தையை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதனை செய்த மருத்துவா், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். சுபா சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, தாலுக்கா காவல் ஆய்வாளா் ரேகா ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →