முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்‘ சிறப்புத் திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம், தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:19 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம், தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை நகராட்சி குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது: தமிழக முதல்வா் ஆணையின்படி, உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டப்படி, அனைத்து துறை திட்டப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கையை அலுவலா்கள் மேற்கொண்டு அதற்கான பதிலை மனுதாரா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ச. முரசொலி , பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை , மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் முனைவா் மு. பாலகணேஷ் , வருவாய்க் கோட்டாட்சியா் .ஜெயஸ்ரீ , தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கா் , பட்டுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சண்முகப் பிரியா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →