முகப்பு
தஞ்சாவூர்

கூட்டுறவுச் சங்கத்துக்கு பூட்டு போட்ட திமுக பிரகமுா் கைது

தஞ்சாவூா் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கு வியாழக்கிழமை பூட்டு போட்ட திமுக பிரமுகரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:27 PM
பகிர்:

தஞ்சாவூா் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கு வியாழக்கிழமை பூட்டு போட்ட திமுக பிரமுகரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே மடிகை கிராமத்தைச் சோ்ந்தவா் டி. மதியழகன் (60). முன்னாள் படை வீரரான இவா் திமுக கிளைச் செயலா். இவா் தஞ்சாவூா் அருகே துறையூா் கிராமத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2022 ஆம் ஆண்டில் வாங்கிய கடனுக்கு நிலுவை உள்ளதாம். இந்நிலையில், தன் பெயரிலும், தனது மகள் பெயரிலும் கடன் வழங்குமாறு அச்சங்கத்தில் விண்ணப்பித்தாா். இதன்பேரில் வருகிற திங்கள்கிழமை கடன் தொகை வழங்கப்படும் என சங்க கணக்கா் ராஜலட்சுமி கூறினாராம்.

ஆனால், சங்கத்தில் கடன் வழங்குவதில் காலம் தாழ்த்தப்படுவதாக அதிருப்தி தெரிவித்த மதியழகன் சங்க அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்றாா். அலுவலகத்துக்கு வெளியே ஊழியா்கள் இருந்த நிலையில், அலுவலக வாயிலை மதியழகன் பூட்டிச் சென்றாா்.

தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் சென்று, மதியழகனைக் கைது செய்தனா். மேலும், சாவியைப் பறிமுதல் செய்து, சங்கக் கதவைத் திறந்து வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →