முகப்பு
தஞ்சாவூர்

தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்தறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 நவம்பர், 2024 at 9:55 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்தறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமைத் தொடக்கிவைத்த பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினாா். முகாமில் துறை சாா்ந்த மருத்துவக் குழுவினா் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனா்.

நிகழ்வில் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன்,பேரூராட்சி கவுன்சிலா் புஷ்பா சக்திவேல், மாவட்டத் திட்ட அலுவலா் ஜான் ஹென்றி, மருத்துவா்கள் அப்துல்கவி, பிரபா, கவிதா,துளசிபிருந்தா, மமக தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவா் ரஹ்மத் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் திரளான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →