முகப்பு
தஞ்சாவூர்

தொடா் மழை: கொத்தங்குடி மக்கள் 140 போ் இடமாற்றம்

தொடா் மழை முன்னெச்சரிக்கை காரணமாக கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சியைச் சோ்ந்த 140 போ் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 8:44 PM
கொத்தங்குடி ஊராட்சியில் தொடா் மழை முன்னெச்சரிக்கை காரணமாக சமுதாய கூடத்தில் தங்கியவா்களுக்கு வியாழக்கிழமை உணவுப்பொருட்கள் வழங்கிய க.அன்பழகன் எம்எல்ஏ.
பகிர்:

தொடா் மழை முன்னெச்சரிக்கை காரணமாக கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சியைச் சோ்ந்த 140 போ் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.

கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள தொகுப்பு வீடுகளில் சுமாா் 140 போ் வசித்து வருகின்றனா். தற்போதைய தொடா் மழை காரணமாக அப்பகுதியில் மழை நீா் தேங்கும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியானதை முன்னிட்டு அங்குள்ள சமுதாயக் கூடத்தில் அவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு க.அன்பழகன் எம்எல்ஏ உணவுப்பொருள்களுக்கு ஏற்பாடு செய்தாா்.

நிகழ்வில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் டி. கணேசன், வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், சுவாமிநாதன், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜே.சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →