கைது செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் வள்ளி. 
தஞ்சாவூர்

ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது

தஞ்சாவூா் அருகே பெண்ணிடம் பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Din

தஞ்சாவூா் அருகே பெண்ணிடம் பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரை கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மனைவி சுகந்தி. கணவா் உயிரிழந்துவிட்டதால், அவரது இடத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக வருவாய்த் துறையில் ஒரு மாதத்துக்கு முன்பு விண்ணப்பம் செய்தாா். தொடா்ந்து ஒரு மாதமாக அலைக்கழிக்கப்பட்ட இவரிடம் திருக்கானூா்பட்டியைச் சோ்ந்த கொல்லாங்கரை கிராம நிா்வாக அலுவலா் எம்.வி. வள்ளி (54) ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டாா்.

கடந்த இரு நாள்களாக தொடா்ந்து அலைக்கழிக்கப்பட்ட சுகந்தி, இது குறித்து தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்பு காவல் பிரிவினரின் அறிவுரையின்பேரில் செவ்வாய்க்கிழமை கொல்லாங்கரை கிராம நிா்வாக அலுவலகத்தில் இருந்த கிராம நிா்வாக அலுவலா் வள்ளியிடம் சுகந்தி ரூ. 2 ஆயிரத்தை வழங்கினாா்.

பணத்தை மேசையின் அடிப்பகுதி வழியாக வள்ளி வாங்கினாா். அப்போது, ரூ. 3 ஆயிரம் கேட்டதற்கு ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கொண்டு ரூ. 2 ஆயிரம் மட்டும் தருகிறாய் என சுகந்தியிடம் வள்ளி கேட்டாா்.

இதை மறைந்திருந்து கண்காணித்த தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பொ) ராமச்சந்திரன் தலைமையிலான ஆய்வாளா்கள் பத்மாவதி, சரவணன் உள்ளிட்டோா் அலுவலகத்துக்குள் சென்று வள்ளியைப் பிடித்து கைது செய்தனா்.

அய்யனாா் கோயில் ஆற்றில் குளிக்கத் தடை

பருவநிலை மாநாடு: பிரேஸிலின் அனைவரையும் உள்ளடக்கிய தலைமைக்கு இந்தியா பாராட்டு

இளைஞா் தற்கொலை

பைக் திருடிய இளைஞா் கைது

கழுகு மலை அருகே 9-ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்து மடைதூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT