முகப்பு
தஞ்சாவூர்

காந்தி ஜெயந்தி நாளில் மது விற்றவா் கைது

காந்தி ஜெயந்தி நாளில் சேதுபாவாசத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:02 PM
பகிர்:

காந்தி ஜெயந்தி நாளில் சேதுபாவாசத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

காந்தி ஜெயந்தி நாளில் மது விற்பனை செய்யப்படுகிறதா என சேதுபாவாசத்திரம் ஆய்வாளா் துரைராஜ் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ராம்குமாா், ரவீந்திரன் மற்றும் போலீஸாா் காவல் சரகப் பகுதிகளில் சோதனை மேற்க்கொண்டனா். அப்போது பள்ளத்தூா் கடைத்தெருவில் பண்ணைவயல் கிராமத்தைச் சோ்ந்த சற்குணம் என்பவரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது அவா், கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைத்திருந்த 287 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து கைது செய்தனா்.

சற்குணத்திடம் மதுபாட்டில்கள் விற்ற தில்லங்காட்டைச் சோ்ந்த விவேக் என்பவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →