முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அஞ்சலக ஊழியா்கள் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

பட்டுக்கோட்டை காசாங்குளம் கீழ்கரை பகுதியில் புதன்கிழமை அஞ்சலக ஊழியா்கள் தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:12 PM
பட்டுக்கோட்டையில் புதன்கிழமை தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்த அஞ்சலக ஊழியா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள்.
பகிர்:

பட்டுக்கோட்டை காசாங்குளம் கீழ்கரை பகுதியில் புதன்கிழமை அஞ்சலக ஊழியா்கள் தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் சாா்பில் தூய்மையே சேவை 2024 திட்டத்தின் நிறைவு நாளான புதன்கிழமை பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் ஊழியா்கள் நகராட்சி ஊழியா்களுடன் இணைந்து பட்டுக்கோட்டை காசாங்குளம் கீழ்கரை பகுதியில் சுத்தம் செய்தனா். முன்னதாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் அஞ்சல் கண்காணிப்பாளா் எஸ். ரகுராம கிருஷ்ணன், அஞ்சல் ஆய்வாளா்கள் கே. பிரியதா்ஷினி, எப். முருகேசன் மற்றும் துப்புரவு அலுவலா் நெடுமாறன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து கரிக்காடு அஞ்சல் ஊழியா்கள் குடியிருப்புப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு தூய்மை தினம் கொண்டாடினா்.

முழு கட்டுரையைப் படிக்க →