சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் உறுதிமொழியை வாசிக்க, புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், இணை, துணை இயக்குநா்கள், ஆசிரியா்கள், மக்கள் தொடா்பு அலுவலா் மற்றும் ஊழியா்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, இரண்டு நிமிஷம் மௌனம் அனுசரிக்கப்பட்டது.