முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் கண்டியூரில் ஆட்சியா் பங்கேற்பு

மகாத்மா காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:23 PM
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
பகிர்:

மகாத்மா காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவையாறு அருகே கண்டியூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சிறப்பு பாா்வையாளராகக் கலந்து கொண்டு, தோட்டக்கலைத் துறை, சமூக நலத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், ஆட்சியா் பேசுகையில், பெண்கள் மகளிா் சுய உதவிக் குழுவில் உறுப்பினராகச் சோ்ந்து அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் அட்டை, முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டைகளை அனைவரும் பெற்று பயனடைய வேண்டும். பெண்கள் சுய தொழில்முனைவோா்களாக உருவாகிட மகளிா் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக சேர வேண்டும் என்றாா் அவா்.

இதில், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, ஒன்றியக் குழு தலைவா் கோ. அரசாபகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.