முகப்பு
தஞ்சாவூர்

திருமங்கலக்குடியில் அக்.9-இல் மக்கள் நோ்காணல் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:10 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

திருவிடைமருதூா் அருகேயுள்ள திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் அக்டோபா் 9- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த முகாம் நடைபெறுவதற்கு முன்பே வியாழக்கிழமை (அக்.3) முதல் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருமங்கலக்குடி கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம்.