முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:01 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் பகுதியில் சிலா் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் சந்திரசேகரன் தலைமையில், வனவா் சிவசங்கா், வனக் காப்பாளா் பாரதிதாசன் ஆகியோா் திருச்சிற்றம்பலம் பகுதியில் திங்கள்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

இதில், பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அஜித் குமாா் (27), பிரபு (39), சுரேஷ் (31) ஆகியோா் வலை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவா்களிடம் உயிரிழந்த நிலையில் இருந்த 2 கீரிப்பிள்ளைகளை கைப்பற்றிய வனச்சரக அலுவலா்கள், மூவரையும் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பேராவூரணி நீதிமன்றத்தில் 3 பேரையும் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைத்தனா்.

வன உயிரினமான கீரிப்பிள்ளைகளை பிடிப்பதற்கும், வேட்டையாடுவதற்கும் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →