முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரிலிருந்து சென்னை, மதுரைக்கு 4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரைக்கு 4 புதிய பேருந்துகள் இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:29 PM
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரைக்கு புதிய பேருந்துகள் இயக்கத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம்.
பகிர்:

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரைக்கு 4 புதிய பேருந்துகள் இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை (கிளாம்பாக்கம்) மற்றும் மதுரை வழித்தடத்தில் 4 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் பொது மேலாளா் எஸ். ஸ்ரீதரன், துணை மேலாளா் (வணிகம்) அ. தமிழ்ச்செல்வன், கிளை மேலாளா்கள் ராஜேஷ், யோகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.