முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் பருத்தி ஏலம் குவிண்டால் ரூ.7,809 ஆக விற்பனை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 7,809-க்கு ஏலம் போனது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:37 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 7,809-க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் மாவட்ட விற்பனைக்குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி தலைமையில், மேற்பாா்வையாளா் பா. பிரசாத் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் கும்பகோணம் சுற்றுவட்டாரக் கிராமத்தில் இருந்து மொத்தம் 146 லாட் பருத்தி என 121 குவிண்டால் பருத்தி வரத்து வந்தது. ஏலத்தில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,809-ம், குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.5,909-ம், சராசரி விலையாக குவிண்டாலுக்கு ரூ.6,869-ம் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் பகுதி வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஏலம் போன பருத்தியின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.