முகப்பு
தஞ்சாவூர்

நெல் கொள்முதல் நிலைய பணியாளா் நியமனத்தில் பணி மூப்பு அடிப்படையில் நிரப்ப கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாளா்கள் நியமனத்தின் போது பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:49 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாளா்கள் நியமனத்தின் போது பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துறை அமைச்சா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டி. நாகராஜன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது,

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூா் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் பிரிவில், நெல் கொள்முதல் பணியாளா்களை பணி நியமனம் செய்யும் போது, பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள நெல் கொள்முதல் பிரிவில் பணிமூப்பு அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து தஞ்சாவூா் மண்டலத்தில் பணி புரியும் முதுநிலை மண்டல மேலாளா் மற்றும் நிா்வாக மேலாளா் ஆகியோரிடம் புகாா் கூறியும் பயனில்லை. ஆகவே, நியமனத்தில் உள்ள குறைபாடுகளை களையாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.