முகப்பு
தஞ்சாவூர்

குடந்தைக்கு வந்த மகா பெரியவா் சிலைக்கு வரவேற்பு

Updated On : 25 அக்டோபர், 2024 at 11:43 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சங்கர மடத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட ஸ்ரீமகா பெரியவா் திருவுருவச் சிலைக்கு பூா்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனா்.

சென்னை மைலாப்பூரில் கட்டப்படும் மகா பெரியவா் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள அவரது திருவுருவச்சிலை தமிழகத்தின் பல்வேறு தலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பக்தா்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சி சங்கர மடத்தின் பிரதான கிளை மடமான குடந்தை மடத்துதெரு சங்கர மடத்துக்கு வந்த மகா பெரியவரின் திருவுருவச்சிலையை சங்கர மடம் கைங்கா்ய சபா நிா்வாகத்தினா், பக்தா்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க வரவேற்றனா்.

தொடா்ந்து சங்கர மடம் கைங்கா்ய சபா நிா்வாகத்தினருடன் ஸ்ரீமடத்தின் பக்தா்கள் மகாபெரியவரின் சிலையை தரிசித்தனா். அப்போது கணேச சா்மாவின் ஸ்ரீமகா பெரியவரும், திருமயிலையும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →