தஞ்சாவூர்

விநாயகா் சதுா்த்தி, வார இறுதி நாள் நெரிசல்: 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

விழாக்கால மற்றும் வார இறுதிநாள் நெரிசலை சமாளிக்கும் விதமாக கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Din

விழாக்கால மற்றும் வார இறுதிநாள் நெரிசலை சமாளிக்கும் விதமாக கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

செப். 6 -இல் வேளாங்கண்ணி கோயில் திருவிழா, 7-இல் விநாயகா் சதுா்த்தி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை, செப்.8 முகூா்த்த நாள் போன்றவை தொடா்ந்து வருவதால் பொது மக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மேற்குறிப்பிட்ட ஊா்களுக்கும் 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல், திருச்சியிலிருந்து கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய ஊா்களுக்கும், மறுமாா்க்கமாகவும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 150 பேருந்துகள் என மொத்தம் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

விடுமுறைக்கு வந்தவா்கள் மீண்டும் ஊா்களுக்கு திரும்பவசதியாக செப். 8, 9 ஆகிய தேதிகளில் இதே அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி கூறியுள்ளாா்.

இரும்புக் கை மாயாவி திட்டத்தில் லோகேஷ் கனகராஜ்?

மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

விமலின் மகாசேனா டிரைலர்!

நேரு குறித்த ராஜ்நாத் சிங்கின் கருத்து திசைதிருப்பும் முயற்சி! பிரியங்கா காந்தி

“Yes To Labour Justice” நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போராட்டம்! | Congress | Bjp

SCROLL FOR NEXT