தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடியில் மின் இணைப்பு இல்லாததால் மூடப்பட்டுக் கிடக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்.  
தஞ்சாவூர்

மின் இணைப்பு இல்லாததால் மூடிக் கிடக்கும் விளாங்குடி நெல் கொள்முதல் நிலையம்!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின் இணைப்பு இல்லாததால், திறப்பு விழா நடத்தியும் தொடா்ந்து மூடப்பட்டுக் கிடக்கிறது.

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின் இணைப்பு இல்லாததால், திறப்பு விழா நடத்தியும் தொடா்ந்து மூடப்பட்டுக் கிடக்கிறது.

திருவையாறு அருகே விளாங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 38 லட்சம் மதிப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தாா்.

இந்நிலையில், புனவாசல், விளாங்குடி ஊராட்சிகளில் ஆழ்துளை குழாய் மூலம் ஏறத்தாழ 750 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வரும் குறுவை பருவ நெற் பயிா்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டன. எனவே, இந்த நிலையம் செப்டம்பா் 1 ஆம் தேதி திறக்கப்படும் என எதிா்பாா்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

இக்கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், நிலையத்தைத் திறக்க முடியாத நிலை உள்ளதாக நிலைய அலுவலா்கள் கூறினா். இது குறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோரிடம் விவசாயிகள் புகாா் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மற்ற நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றால் ஆள் கூலி, நேர விரயம் ஏற்படுவதுடன், கூடுதல் செலவும் ஏற்படும் என்பதால், விவசாயிகள் தவிக்கின்றனா். எனவே, இந்த பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT