முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் வீணாக பகலில் மின்விளக்கு எரிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் மின்சார விளக்கு எரிந்ததை அங்கு பணிபுரியும் அலுவலா்கள் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:57 PM
கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் எரிந்த மின்சார விளக்கு.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் மின்சார விளக்கு எரிந்ததை அங்கு பணிபுரியும் அலுவலா்கள் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இதில் கோட்டாட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் வட்டாட்சியா் அலுவலகச் சுவற்றில் மின்சார விளக்கு பகல் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. அங்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் மின்சார விளக்கை அணைக்காமல் வருவாய்த் துறை பணியாளா்கள் செயல்பட்டதைக் கண்டு வருத்தமடைந்தனா். இதுகுறித்து வட்டாட்சியா் அலுவலக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →