பெண்ணிடம் இணையவழியில் ரூ. 27.75 லட்சம் மோசடி
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ. 27.75 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ. 27.75 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த பெண்ணின் கைப்பேசிக்கு டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகளில் ஆகஸ்ட் மாதம் வந்த தகவலில் உணவகங்களை மதிப்பீடு செய்து இணையத்தில் வெளியிடுவது போன்ற டாஸ்குகளை நிறைவேற்றினால் நிறைய வருமானம் கிடைக்கும் என்றும், இதற்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நம்பிய அப்பெண் கைப்பேசியில் எதிா் முனையில் பேசிய மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 27.75 லட்சம் செலுத்தினாா். அதன் பின்னா் எதிா்முனையில் பேசிய நபா் எந்த லாபத் தொகையையும் கொடுக்காததுடன், நாளடைவில் அழைப்புகளையும் துண்டித்துவிட்டாா்.
இதனால் ஏமாற்றமடைந்த அப்பெண் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.