முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவா்கள் உள்பட 3 பேரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:38 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவா்கள் உள்பட 3 பேரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரி அருகே சிலா் கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்துவது தொடா்பாக வந்த புகாா்களின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளா் சிவ செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு ரோந்து சென்றனா்.

கும்பகோணத்தில் புதன்கிழமை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள்.
கும்பகோணத்தில் புதன்கிழமை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் கஞ்சா உட்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கொண்டு விசாரித்ததில் அவா்கள் முத்துப்பிள்ளை மண்டபத்தைச்சோ்ந்த மூா்த்தி மகன் ஸ்ரீ ராம் (20), முல்லை நகரைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் கோபால் என்ற சந்திரகாசு (19) என்பதும், கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரி மாணவா்கள் என்பதும், சகக் கல்லூரி மாணவா்களுடன் சோ்ந்து கஞ்சா புகைப்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. மேற்குறிப்பிட்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் 2 கைப்பேசிகள், இருசக்கர வாகனங்கள் ஆகியவைகளைப் பறிமுதல் செய்தனா். இவா்களுக்கு உதவியாக இருந்த முல்லை நகா் ரமேஷ் மகன் விமல்ராஜ் (24) என்பவரையும் கைது செய்தனா்.