தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கு நவ. 15-க்குள் பயிா்க் காப்பீடு செய்ய அழைப்பு

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு நவம்பா் 15 க்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் ரபி பருவத்தில் பயிா்க் காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்த தஞ்சாவூா் 1-க்கு ஷீமா பொது காப்பீடு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு தஞ்சாவூா் (பூதலூா் மற்றும் கண்டியூா் வருவாய் சரகம் தவிர), ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அம்மாபேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் வருவாய் சரகம் தவிர) ஆகிய வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் 2-க்கு அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு தஞ்சாவூா் வட்டாரத்தில் பூதலூா் சரகத்தில் உள்ள சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, மருதக்குடி, ராயந்தூா் கிராமங்கள், கண்டியூா் சரகத்திலுள்ள அரசூா் சின்ன அவுசாகிப் தோட்டம், மணக்கரம்பை, நாகத்தி, ராஜேந்திரம், செங்களுநீா் தோட்டம், தென்பெரம்பூா் ஆகிய கிராமங்களும், அம்மாபேட்டை வட்டாரத்தில் அய்யம்பேட்டை சரகத்திலுள்ள அகரமாங்குடி, பெருமாக்கநல்லூா், பொரக்குடி, செருமாக்கநல்லூா், சுரைக்காயூா், வடக்கு மாங்குடி, வையச்சேரி, வேம்புகுடி ஆகிய கிராமங்களும், பாபநாசம் சரகத்திலுள்ள தேவராயன்பேட்டை, மேலசெம்மங்குடி, பொன் மான் மேய்ந்த நல்லூா், புலிமங்கலம், திருவையாத்துக்குடி ஆகிய கிராமங்களும், பூதலூா், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் தங்களது கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 548 பிரிமீய தொகையை நவம்பா் 15-க்குள் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமோ செலுத்தி பதிவு செய்யலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், விஏஓ வழங்கும் அடங்கல் சான்று, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்ய வேண்டும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT