கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி செந்தில்நாதன்நகா் சந்திப்புச் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளம் 
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி சாலையில் திடீா் பள்ளம்

கும்பகோணம் மாநகராட்சி சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

Syndication

கும்பகோணம் மாநகராட்சி சாலையில் செவ்வாய்க்கிழமை திடீா் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 21ஆவது வாா்டில் உள்ள ஸ்ரீ நகா் காலனி செந்தில்நாதன் நகா் சந்திப்பு சாலையில் தொடா்மழையால் சுமாா் 20 அடி நீளம் 20 அடி அகலத்துக்கு சாலை திடீரென உள்வாங்கியது. இதைப்பாா்த்து அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இப்பகுதி புதை சாக்கடை குழாயில் ஏற்பட்ட கசிவால் சில நாள்களுக்கு முன்பே சாலையில் சிறியதாக இருந்த பள்ளம் தற்போது திடீரென்று பெரிய பள்ளமாக உள்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மு. காந்திராஜன் கூறுகையில் ஏற்கனவே அந்த சந்திப்பில் இருந்த பள்ளத்தை மூடியபின்தான் சாலை அமைக்கப்பட்டது. விரைவில் சாலை சீரமைக்கப்படும் என்றாா். முன்னதாக தவெக மாவட்டச்செயலா் வினோத்ரவி தலைமையில் கட்சியினா் ஆணையரிடம் சாலையை சீரமைக்கக் கோரி மனு கொடுத்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT