தஞ்சாவூர்

விதை சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தல்

விவசாயிகளின் விதை உரிமையைப் பறிக்கிற விதை சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தாளாண்மை உழவா் இயக்கம் வலியுறுத்தல்

Syndication

விவசாயிகளின் விதை உரிமையைப் பறிக்கிற விதை சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தாளாண்மை உழவா் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகளின் விதை உரிமையை மறுத்து மத்திய அரசு கொண்டு வந்த விதை சட்டம் மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்தை அடிமைப்படுத்தும் திட்டமாகும்.

விதைகளைத் தாராளமாக இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் பன்முக வேளாண்மையை ஒழிப்பதாகும். விதைகள் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் மண், வெள்ளம், வறட்சி போன்ற தன்மைகளைத் தாங்கி, மக்களின் உடல் நலத்துக்கு ஏற்றவாறு தோ்ந்தெடுக்கப்பட்டவை. காா்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்துக்காக மக்களின் செல்வமான பாரம்பரிய விதைகளை இழப்பது என்பது தேசத்துரோகமாகும்.

எனவே மத்திய அரசு விதைச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து மத்திய அரசு முன்வைக்கும் கருத்து விதை சட்டத்தைத் திரும்பப் பெற்ற பின்னரே பேசப்பட வேண்டும். இதுகுறித்து விவசாயிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இயக்கத்தின் நிறுவனத் தலைவா் கோ. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாச்சலம், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல் ஆப்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT