டி.டி.வி. தினகரன் கோப்புப் படம்
தஞ்சாவூர்

கூட்டணியை பிப்ரவரியில் அறிவிப்போம்: டி.டி.வி. தினகரன்

பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிப்ரவரியில் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பாக அறிவிப்போம் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

Syndication

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிப்ரவரியில் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பாக அறிவிப்போம் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: கூட்டணிக்கு தலைமையேற்கும் கட்சிகள் எங்களை அணுகி பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. அது, முடிவுக்கு வந்த பிறகு கூட்டணி குறித்து தெரியவரும்.

பொதுவாக கூட்டணி டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. தோ்தல் அறிவிப்பு பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

எனவே, ஜெயலலிதா பிறந்த நாளுக்கு (பிப்.24) முன்பாக கூட்டணியை உறுதி செய்து அறிவிப்போம். அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.

அரசியலுக்காக கடவுள், மதம், ஜாதி பெயரை பயன்படுத்தி மக்களைப் பிரிக்கும் செயலை செய்யக் கூடாது என்றாா் தினகரன்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT