முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜக மூலம் அமமுகவிற்கான தொகுதி உடன்பாடு! டிடிவி தினகரன் தகவல்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் தான் நடைபெறும் என டிடிவி தினகரன் கூறியது குறித்து...

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:40 PM
டிடிவி.தினகரன்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:31 PM

அமமுகவிற்கான தொகுதி உடன்பாடு பாஜக மூலம் தான் நடைபெறும் என தெரிவித்த அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் டிடிவி.தினகரன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியது:

நான் பேரவைத் தோ்தலில் போட்டியிட மாட்டேன். மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் கேட்கவில்லை.

Advertisement

அரசியலில் தொடர வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ். எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் சட்டப்பேரவையில் அவரது ஆதரவாளா் ஐயப்பனை பேச வைத்தது, தொண்டர் தெய்வமாக போற்றும் எம்ஜிஆா், ஜெயலலிதா புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியது, கோடானுகோடி தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:38 PM

திமுக என்கிற தீய சக்தியை எதிா்த்து அதிமுகவை துவங்கி, அவா் உயிருடன் இருந்தவரை திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுத்து வைத்திருந்தாா் எம்ஜிஆா். அதன் பிறகு திமுகவை வலுவாக எதிா்த்த ஒரு அரசியல் சக்தி ஜெயலலிதா. இப்படிப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என்று பன்னீா்செல்வம் தெரிவித்தது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது.

ஓ.பி.எஸ். மக்கள் பணியாற்ற வேண்டும் என இன்னொரு கட்சிக்கு செல்லலாம். ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகி, கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக 2017-ஆம் ஆண்டு திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் நண்பர் ஓ.பி.எஸ்.

பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார். ஓ.பி.எஸ். திமுகவில் சேரட்டும்; பதவிக்கு வரட்டுபம், வராமலும் போகலாம். அதை மக்கள் தீர்மானிப்பார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழுக்கு கலக்கம் விளைவிப்பதை மன்னிக்க முடியாது. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். இதைவிட சிறப்பு துரியோதன கும்பல் போல பேசியதை முதல்வர் கைத்தட்டி ரசித்தது புன்முறுவலாக இருந்தது. இதற்கேற்ப ஓ.பி.எஸ்., ஐயப்பன் இருவரும் நடந்துகொண்டது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருக்கும் இதைவிட தீங்கை யாரும் இழைக்க முடியாது. ஓ.பி.எஸ். பசுத்தோல் போர்த்திய புலியாக இதுவரை இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தர்மயுத்தம் தர்மர் நடத்த வேண்டும்; அதர்மவாதி நடத்தினால் அதர்மத்தில்தான் முடியும்.

பணநாயகத்தால் வென்றுவிடலாம் என நினைக்கிறார்கள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி, பணநாயகத்தால் எப்படியாவது வென்றுவிடலாம் என நினைத்தவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி முழுமை பெற்று, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரணியில் திரண்ட பிறகு அச்சமடைந்து அவசரக் கதியில் ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளனர். இதற்காக ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வளர்ச்சி நிதி ரூ.11 ஆயிரம் கோடியை மாற்றியுள்ளனர். ரூ.50 ஆயிரம் அல்ல, வீட்டிற்கு ரூ. 1 லட்சம் கொடுத்தாலும் இந்த தேர்தலில் திமுக உறுதியாக தோற்கடிக்கப்படுவார்கள்.

இந்த பயத்தினால்தான் பல கட்சிகளை கூட்டணிக்கு இழுத்துள்ளனர். இதை அரசியல் சந்தர்ப்பவாதமாக பலரும் பேசுகிறார்கள். பணநாயகத்திற்கான வெற்றியே தவிர பொதுநலனுக்கான வெற்றி அல்ல.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்

ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் ஒரணியில் இணைந்து, எங்களுக்குள் இருந்த மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து, ஜெயலலிதாவின் ஆட்சியையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியையும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என உள்ளோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.

அமமுகவுக்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் தான் நடைபெறும்

நான் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறேன். அமமுகவுக்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் தான் நடைபெறும். இன்னும் அதற்கான பேச்சுவாா்த்தை ஆரம்பிக்கவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக உடன் பேசுவேன். அதற்கான நேரம் இருக்கிறது. இப்போது கூட்டணி பலமாக இருக்கிறது. அமமுகவில் தகுதியான வேட்பாளர்கள் பேரவைக்கு செல்வார்கள். நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம் என்றாா்.

அமைச்சர் நேருவை பாதுகாக்க நினைக்கிறார்கள்

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பட்டி தொட்டி எல்லாம் கஞ்சா புழக்கம் கரைபுரண்டு ஓடுகிறது. பள்ளி மாணவா்களே கஞ்சா பயன்படுத்தும் அளவிற்கு குட்டி சுவராகி விட்டது.. போலீசாரே கஞ்சா விற்கிறார்கள். அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் திமுகவின் முதல் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் வழக்கில் வரும் என்பதால் அமைச்சர் நேருவை பாதுகாக்க நினைக்கிறார்கள் என்றார்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:38 PM
summary

Constituency agreement for AMMK will be done through BJP says TTV Dhinakaran

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:38 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.