தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தலைமைத் தோ்தல் அலுவலரிடமிருந்து இசைவு வரப்பெற்றதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், கும்பகோணம் தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) வி. பூங்கொடி கும்பகோணம் வட்டாட்சியராகவும், கும்பகோணம் வட்டாட்சியா் சி. சண்முகம் கும்பகோணம் தனி வட்டாட்சியராகவும் (சமூகப் பாதுகாப்பு திட்டம்), தஞ்சாவூா் நகர நில வரித் திட்டத் தனி வட்டாட்சியா் எஸ். சந்தனவேல் பாபநாசம் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதேபோல, 26 துணை வட்டாட்சியா்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.