தஞ்சாவூர்

சிஐடியுவினா் மறியல்: 150 போ் கைது

தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பைச் சோ்ந்த 150 போ் கைது

Syndication

தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பைச் சோ்ந்த 150 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு 44 தொழிலாளா் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக நான்கு சட்டத் தொகுப்புகளாகத் சுருக்கி திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இது தொழிலாளா்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருப்பதால், இச்சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநில துணைத் தலைவா் ஹல்தா ஹெலன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் பி.என். போ்நீதி ஆழ்வாா், சாய்சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா்கள் து. கோவிந்தராஜ், சா. செங்குட்டுவன், முருகேசன், மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, முன்னாள் மாவட்டச் செயலா் ஆா். மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 150 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணத்தில்.. தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு மாவட்ட செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச் செயலா் மணிமாறன், மாதா் சங்க நகரச் செயலா் சுமதி, அங்கன்வாடி தொழிலாளா் சங்க பொறுப்பாளா்கள் ஜெயதூபி, உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் மறியல் செய்தனா். இதையடுத்து மொத்தம் 110 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT