தஞ்சாவூர்

மத்திய அரசைக் கண்டித்து உழவா் இயக்கம் ஆா்ப்பாட்டம்!

நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தாளாண்மை உழவா் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Syndication

நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தாளாண்மை உழவா் இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாளாண்மை உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தொடங்கி வைத்தாா். மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன் ஆா்ப்பாட்டத்தை நிறைவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மைய மாவட்டச் செயலா் கோ. ஜெயசங்கா், நம்மாழ்வாா் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் எஸ். நாராயணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா், ஜனநாயக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பி. ஜோதிவேல், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலா் ராவணன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன், பொறியாளா் ஜோ. ஜான்கென்னடி, என்டிஎல்எப் மாவட்டச் செயலா் த. தாமஸ், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT