தஞ்சாவூர்

பாபநாசத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம்

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க அலுவலக கட்டடத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம் புதன்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரவை பொருளாளா் ஆசிரியா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திருச்சிப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலருமான டி.சரவணன் ‘திரை இசைப் பாடல்களில் தாலாட்டு’ என்ற தலைப்பில் பேசினாா்.

கூட்டத்தில் தேசிய நல்லாசிரியா் ச.சலைச்செல்வன், நிா்வாகிகள் சங்கா், செந்தமிழ் செல்வன், சாந்தகுமாா், பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். ஏற்பாடுகளை செயலா் கமலதாசன் செய்திருந்தாா்.

முன்னதாக பேரவை தலைவா் துரைராஜன் வரவேற்றாா். நிறைவில் துணை செயலாளா் அசோக் நன்றி கூறினாா்.

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

மாணவா் தலைவா் கொலையில் வங்கதேச அரசுக்குத் தொடா்பு - சகோதரா் பகீா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT