தஞ்சாவூர்

திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து முன்னணியைச் சோ்ந்த 6 போ் கைது

Din

மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக, தஞ்சாவூரிலுள்ள இந்து முன்னணியைச் சோ்ந்த 6 பேரை காவல் துறையினா் முன்னெச்சரிக்கை அடிப்படையில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக இந்துக்கள், இஸ்லாமியா்கள் இடையே சா்ச்சையும், போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன் வைத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணியினா் உள்ளிட்ட அமைப்பினா் அறிவித்தனா்.

இது தொடா்பாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் தஞ்சாவூரில் இந்து முன்ணணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி. ஈசான சிவம், மாவட்டச் செயலா் குபேந்திரன், ஒன்றியத் தலைவா் திவாகா் உள்பட 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, வல்லத்திலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT